திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (14:44 IST)

ஸ்பெஷல் நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது சூர்யாவின் ஜெய்பீம்… ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யாவின் ஹிட் திரைப்படமான ஜெய்பீம் திரைப்படம் சூர்யாவின் பிறந்தநாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்தது. இந்த படம் அமேசான் ஓடிடியில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது. இந்த படத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் இருளர் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில் பெரும் வெற்றி பெற்ற இந்த படத்துக்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஞானவேல் இதை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று சென்னையில் உள்ள பாடி பகுதியில் அமைந்துள்ள கிரீன் சினிமாஸில் ரிலீஸாகிறது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.