1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (09:02 IST)

விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் SJ சூர்யா….? தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த போஸ்டர்களில் விஜய் மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்தனர். கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மீண்டும் ஐதராபாத்தில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு ஐதராபாத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் முதல் லுக் வெளியான போது படம் ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என்று பதிவுகள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த படத்தின் ரீமேக் உரிமையை  அதிகாரப்பூர்வமாக வாங்கிதான் படத்தை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தைப் பற்றிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் நண்பன் மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.