வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (10:36 IST)

சூர்யா- சிறுத்தை சிவா படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக பஞ்சாப் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில் சிறுத்தை சிவா படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்த இந்த படத்தை தற்போது தில் ராஜு தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு கருத்தாக தில் ராஜு பைனான்ஸ் மட்டுமே செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான மஹிரா ஷர்மா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 13 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.