செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (18:04 IST)

சூர்யாவின் அடுத்த பட சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

gargi
ஒருபக்கம் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி ’வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் சூர்யாவின் 2டி நிறுவனம் சாய்பல்லவியின் கார்கி என்ற திரைப் படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் உள்ளது
 
கார்கி படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் 
 
மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன்னிங் டைம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 சாய்பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், ஜெயபிரகாஷ், லிவிங்ஸ்டன், கவிதாலயா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.