1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (18:05 IST)

ஜகமே தந்திரம் தோல்வி… யோசிக்கும் ஓடிடி நிறுவனங்கள்!

ஜகமே தந்திரம் படம் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் மேற்கொண்டு புதிய படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் தளத்துக்கும் இந்த படத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கைக் கூடவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் இனிமேல் பெரிய நடிகர்கள் படங்களை நம்பி செல்லாமல் நல்ல கண்டெண்ட் உள்ள படங்களாக வாங்க ஓடிடி நிறுவனங்கள் முடிவு  செய்துள்ளதாம்.