செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (13:17 IST)

எனக்கு சவால் விட்ட ஜானு - ட்விட் தட்டிய சமந்தா த்ரிஷாவை தோற்கடிப்பாரா?

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம், '96'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' சி.பிரேம்குமார் இயக்கியிருந்த இந்தப் படம், தமிழில் பெரிதும் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டின் பல விருதுகளை இந்தப் படம் பெற்றது. கோவிந்த் வசந்தா இசை பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. 

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் பிரேம் குமார் இயக்கி வருகிறார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கிலும் கோவிந்த் வஸந்தாவே இசையமைக்கிறார். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த்தும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். இன்னும் இப்படத்தின் டைட்டில் உறுதி செய்யவில்லை. சமீப நாட்களாக அதே யெல்லோ சுடிதாரில் சமந்தாவை கண்ட அவரது ரசிகர்கள் நீங்கள் தான் இந்த படத்தின் ரீமேக்கிற்கு பொருத்தமாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் என கூறி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ள சமந்தா தனது ட்விட்டரில் ' இது முடிந்தது!!. மற்றுமொரு சிறப்பான படம் மற்றும் நேற்றையதை விட  எனக்கு சவால் விட்ட ஒரு சிறந்த கதாபாத்திரம்.  ட்ரீம் டீமாக இருந்ததற்காக எனது இயக்குனர் பிரேம் மற்றும் கோ-ஸ்டார் ஷர்வானந்திற்கு நன்றி ???? #ஜானு ..எனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன். எப்போதும் நன்றியுள்ளவள் என மிகுந்த நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திரிஷாவின் நடிப்பை சமந்தா தோற்கடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்