என் கணவரின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்தேன் - மனம் திறந்த சமந்தா!

Papiksha| Last Updated: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (12:57 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.


 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சமந்தா " நாக சைதன்யாவின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி அனைவரையும் ஒரு நிமிடம் அதிர வைத்துவிட்டார். இதை கேட்டவுடன் அந்த அரங்கமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனது. பின்னர், அமைதியாக பேச தொடங்கிய அவர், நாக சைதன்யாவின் முதல் மனைவி, அவரது படுக்கையறையில் உள்ள தலையணை தான். ஏனெனில், அவர் தலையணையை முத்தமிடும்போது, அதுவும் பதிலுக்கு அவருக்கு முத்தமிடும் என்று கூறி வாயடைக்க வைத்தார். தற்போது இந்த செய்திதான் கோலிவுட் , டோலிவுட்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது 


இதில் மேலும் படிக்கவும் :