1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (11:38 IST)

முந்தைய பாகத்தின் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!!! இத்தனை கோடி வசூலா!!!

ஹாலிவுட்டின் பிரபமிக்கத்தக்க டாப் சீரிஸ் படங்களில் ஒன்றான அவென்ஜர்ஸ் 1 2 3 என பல பாகங்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் சாதனையை படைத்து வந்தது. 
அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்களின் கடைசி பாகமாக "அவெஞ்சர்ஸ் எண்டு கேம்" என்ற படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.
 
'அவெஞ்சர்ஸ்' தொடரின் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இப்படம் தமிழகம் உட்பட இந்தியாவில் மட்டும் 2500 தியேட்டர்களில் இப்படம் ஓடுகிறது.
 
இதுவரை வெளிவந்த அத்தனை அவெஞ்சரஸ் சீரியஸ் படங்களிலும் இந்த படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கடைசி பாகமான இன்ஃபினிட்டி வார் வெளியான 3 நாட்களில் சுமார் 97 கோடிகளை அள்ளியிருந்த நிலையில் தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 3 நாட்களில் 150 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது. இதன்மூலம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முந்தைய பாகத்தின் சாதனையை முறியடித்துள்ளது.