ரசிகர்களை தேம்பி தேம்பி அழவைத்த முதல் ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் ! ஏன் தெரியுமா?
தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு கூட இப்படியொரு முன்பதிவு வசூல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை . ஆனால் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்திற்கு முந்தியடித்துகொண்டு முன்பதிவு செய்துவிட்டனர். படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் ஆச்சரியப்படுவதைவிட அதிர்ச்சியடைந்திருப்பார்கள்.'அவெஞ்சர்ஸ்' தொடரின் கடைசி பாகமாக வெளிவர உள்ளதால்தான் இந்தப் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு.
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இன்று(26 ஏப்ரல்) இப்படம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 450 தியேட்டர்களில் இப்படம் வெளிவந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2500 தியேட்டர்கள் வரை படம் வெளிவந்துள்ளது.
இதுவரை வெளிவந்த அதனை அவெஞ்சரஸ் சீரியஸ் படங்களும் இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ் அவெஞ்சரஸ் எண்டு கேம் படத்தில் ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் படத்தில் டப்பிங் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் சிறியவர் முதல் பெரியோர்வரை தேம்பி தேம்பி அழுகிறார்கள் அதற்கு முக்கிய காரணமே இந்த படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரம் இறந்து போய்விடுகின்றனர். இதனால் இரண்டு கடைசி 45 நிமிட காட்சிகளில் ரசிகர்கள் தங்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்தமுடியாமல் கண் கலங்கி விடுகின்றனர்.