அடேங்கப்பா! அவென்ஜர்ஸ் முதல் நாள் வசூல் இவ்ளோவ்வா! கேட்டால் வாயடைத்து போவீங்க!

Last Updated: சனி, 27 ஏப்ரல் 2019 (11:14 IST)
ஹாலிவுட்டின் பிரபமிக்கத்தக்க டாப் சீரிஸ் படங்களில் ஒன்றான அவென்ஜர்ஸ் 1 2 3 என பல பாகங்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் சாதனையை படைத்தது வந்தது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்களின் கடைசி பாகமாக "அவெஞ்சர்ஸ் எண்டு கேம்" என்ற படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.


 
'அவெஞ்சர்ஸ்' தொடரின் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இப்படம் நேற்று இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் 450 தியேட்டர்களில் வெளிவந்துள்ளது.  இந்தியாவில் மட்டும் 2500 தியேட்டர்களில் இப்படம் ஓடுகிறது.
 
இதுவரை வெளிவந்த அத்தனை அவெஞ்சரஸ் சீரியஸ் படங்களும் இந்தியாவில் அமோக  வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ் அவெஞ்சரஸ் எண்டு கேம் படத்தில் ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி படத்தில் டப்பிங் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் படத்தை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியின் குரல் இந்த படத்திற்கு செட் ஆகவில்லை என கூறிவருகின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், படம் வெளிவந்த   முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 169 பில்லியன் அதாவது இந்திய ரூபாயின் மதிப்புபடி 1,186 கோடிகளை வசூல் செய்துள்ளது. மேலும் இதுவரை வந்த அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்களிலேயே இந்த படம் தான் எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை வாரி குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 
உலகளவில் இந்த படம் பல மில்லியன்களை வசூலிக்கும் என்றும், இந்தியாவில் மட்டும் இந்த படம் 350 கோடிகளை வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :