காஞ்சனா 3 படத்தை ஓரங்கட்டிய அவென்ஜர்ஸ்!

Last Updated: திங்கள், 29 ஏப்ரல் 2019 (12:42 IST)
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தால் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே நடித்து, முனி பட வரிசையில் வெளியான 4-வது படம் காஞ்சனா 3. இந்தப் படம் கடந்த 19-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. தெலுங்கில் ஒரே வாரத்தில் ரூ 14 கோடி வசூல் குவித்தது. தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் 12 கோடி ரூபாயை கல்லாக் கட்டி முதல் வார முடிவில் 60 கோடி ரூபாயைத் தாண்டி உலகம் முழுவதும் முதல் வார முடிவில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது.
 
கோடைவிடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில் ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்த வாரம் திரைக்கு வந்து காஞ்சனா 2 படத்தின் வசூலை தூக்கி வாரி சாப்பிட்டுவிட்டது. 


 
என்னதான், தமிழ் படத்தில் சண்டைக்காட்சிகள், கிராஃபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போன்று இருப்பதில்லை என்று பலருக்கும் பொதுவான கருத்து உண்டு. அந்தவகையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்திழுத்துவிட்டது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இதனால், காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கப்படுள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :