1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (17:32 IST)

''அஜித்61'' பட அப்டேட் இன்று வெளியாகாது என தகவல் ; ஏன் தெரியுமா?

''அஜித் 61'' பட போஸ்டர் அல்லது அப்டேட் இன்று வெளியாகாது என தகவல்  வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அஜித்61 படத்திற்காக  மீண்டும் ஐதராபாத் சென்றுள்ள அஜித்குமார், அங்கு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது  அஜித்61 படத்திற்கு ஷூட்டிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார்,


வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் 2 வேடங்களில் நடித்து வருவதாகவும், இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித் நடிக்கும் படங்களில் வீரம், விவேகம், வேதாளம், வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் 61 படத்திற்கு  வல்லமை என்று பெயரிட்டுள்ளதாகவும்,  தயாரிப்பாளர் போனிகபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு,ம் நாளை இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் செய்ய  படக்குழு திட்டமிட்டுள்ளதாக நேற்று  சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

அதனால், அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலையில், இன்று அஜித்61 படத்தின் போஸ்டர் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகிறது. மேலும், ஸ்ரீதேவியின் பிறந்த நாளுக்கு அஜித்61 பட அப்டேட் மற்றும் போஸ்டர் வெளியிட எந்த திட்டமிடலும் இல்லை எனப் படக்குழு கூறியுள்ளதாகத் தக்வல் வெளியாகிறது.

ஒருவேளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அஜித் 61 படத்தின் முக்கிய அப்டேட் அல்லது போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.