வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (14:58 IST)

எஸ்.ஐ,. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

குற்றாலத்தில் சிறப்பு எஸ்.ஐ, ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேந்திரன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவரது பாதுகாப்பிற்குச் சென்றிருந்த சிறப்பு எஸ்.ஐ பாத்திபன், அங்குள்ள ரிசார்டில் தங்கியிருந்தார்.

இந்த   நிலையில்ல்  இன்று காலையில் பார்த்திபன் தங்கியிருந்திய பாத்ரூமில்  அவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த ரீசார்ட் ஊழியர்கள் இதுகுறித்து போலிஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பார்த்திபன் உடலை கைப்பற்றி, விசாரித்தனர். அதில், எஸ்.ஐ,. பார்த்திபன் 15 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.