செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (17:08 IST)

’இந்தியன் 2’ பிளாஷ்பேக் காட்சி: 1920ஆம் ஆண்டு கெட்டப்பில் கமல்!

kamal indian2
’இந்தியன் 2’ பிளாஷ்பேக் காட்சி: 1920ஆம் ஆண்டு கெட்டப்பில் கமல்!
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்ற செய்தியை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இதில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
குறிப்பாக 1920ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முன் உள்ள பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கமல்ஹாசன் இதில் புதிய கெட்டப்பில் அட்டகாசமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படப்பிடிப்பை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் இதில் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன