விஜய்யின் அடுத்த படத்தில் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை

Last Updated: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:34 IST)
`சர்கார்' படத்திற்கு அடுத்து விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் விஜய் 63 படத்தில், விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளட் படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த  நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில்,  விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக  கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் 63 குறித்த அறிவிப்பு  செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :