'சர்கார்' படத்திற்காக இலங்கை தியேட்டர்கள் இப்போதே தயார்

Last Modified ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (19:56 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் சர்கார்' படத்திற்காக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் மட்டுமின்றி இலங்கையில் உள்ள தியேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது. வரும் தீபாவளி முதல் தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் காலை 10.30, மதியம் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகள் திரையிடப்படும் என இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய்யின் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை அதிக அளவு பகிர்ந்து வருவதாக் சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது.
விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய ஒரு படம் ஆகும்இதில் மேலும் படிக்கவும் :