வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (21:29 IST)

முதலிரவை வீடியோ எடுக்க வேலைக்கு ஆள் வைக்கும் காதல் ஜோடி

ஒவ்வொரு தம்பதிக்கும் முதலிரவு என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஆகும். இந்த முதலிரவை ஒவ்வொரு ஜோடியும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மலரும் நினைவாக வைத்திருப்பதுண்டு.
 
இந்த நிலையில் பிரிட்டன் காதல் ஜோடி ஒன்று தங்களுடைய முதலிரவை வீடியோ எடுத்து பாதுகாக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தங்களுடைய முதலிரவை வீடியோ எடுக்க வேலைக்கு ஆள் வேண்டும் என்றும் ஒருசில மணி நேரமே இருக்கும் இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் ரூ.1.8 லட்சம் சம்பளம் தர தயாராக இருப்பதாகவும் இந்த காதல் ஜோடி விளம்பரம் செய்தனர்.
 
இந்த வேலைக்கு போட்டி போட்டு கொண்டு ஆட்கள் குவிய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஒருவர் கூட இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்தை வீடியோ எடுக்க ஒப்பந்தமானவர் கூட இந்த வேலைக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாராம். இருப்பினும் தங்களுடைய திருமண தேதி செப்டம்பர் வரை உள்ளதால் நிச்சயம் அதற்குள் யாராவது ஒருவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இந்த காதல் ஜோடி இருப்பதாக கூறப்படுகிறது.