திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (11:29 IST)

ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி ஜோடியாக நடிக்கும் படத்தின் முக்கிய தகவல் வெளியீடு

அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி நடித்து வரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '4ஜி', 'ஐங்கரன்', 'அடங்காதே', 'குப்பத்துராஜா', '100% காதல்', 'சர்வம் தாளமயம்', 'ரெட்டைக்கொம்பு', 'கறுப்பர் நகரம்', ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11  மணிக்கு வெளியிட இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.