பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: வழக்கை வாபஸ் பெறுகிறார் இளையராஜா!

ilaiyaraja
பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: வழக்கை வாபஸ் பெறுகிறார் இளையராஜா!
siva| Last Modified புதன், 23 டிசம்பர் 2020 (11:03 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய தனக்கு அனுமதி வேண்டும் என்று சமீபத்தில் இளையராஜா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகளே மனிதாபிமான அடிப்படையில் இளையராஜாவுக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது

இதனை அடுத்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் ஒரு சில நிபந்தனைகளுடன் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதித்தது என்ற செய்தி நேற்று வெளியானது. இந்த நிலையில் திடீரென இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனது பொருட்களை மட்டும் எடுத்து கொள்ள அனுமதித்தால் போதும் என்றும் தியானம் செய்யும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவரது தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் இந்த திடீர் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :