ஹாலிவுட் பாடலுக்கு இசையமைத்த இளையராஜா!

Last Updated: புதன், 26 ஜூன் 2019 (16:48 IST)
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகாளாக இசைத்துறையில் ஆளுமை படைத்து இளையராஜாவை மிஞ்ச ஒருவருமில்லை அந்த அளவுக்கு தன் படைப்புகளை அழுத்தமாக மக்கள் மனதில் வேரூன்ற செய்துவிட்டார் இளையராஜா. 
 

 
தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து காதல் , பாசம் , நட்பு, குடும்ப உறவு என ரசிகர்களின் நினைவில் என்றும் வாழும் இளையராஜா தற்போது ஆங்கில பாடல் ஒன்றிற்கு இசையமைத்து அசத்தியுள்ளார். 
 
துரை பாண்டியன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் முன்பதிவு எண்ணற்ற படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஆங்கிலப்பாடல் கம்போஸ் செய்துள்ளார். இந்தப் பாடலை டாக்டர் சௌமோ கோஷல் என்பவர் எழுதியுள்ளார். ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனர் கவுதமன் மகன் தமிழ் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
 
கிராமத்து இளைஞர்கள் நடத்தும் இசைநிகழ்ச்சியில் கதாநாயகியின் கவனத்தை ஈர்க்க இளைஞர் ஆங்கில பாடல் ஒன்றை பாடுவதாக காட்சி அமைக்கப்படுகிறது. இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :