புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (19:23 IST)

இதே வேலையா ..? செக்யூரிட்டியை திட்டிய இளையராஜா... கடுப்பான ஆடியன்ஸ்...வைரல் வீடியோ

இந்திய சினிமாவில் உள்ள இசைஆளுமைகளில் முக்கியமானவர் மற்றும் தமிழ் சினிமாவில் இசை ராஜாங்கமே நடத்தியவர் இளையராஜா. அவர் நிகழ்த்திய சாதனைகளை யாராலும் மறக்க முடியாது. ஆனால் சமீப காலமாக அவர் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகிவருகிறார்.

இளையராஜாவின் 76வது பிறந்தநாளையொட்டி ஈ.வி,பி ஃபிலிம் சிட்டியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளையராஜா  செக்யூரிட்டியை திட்டினார்.இந்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

செக்யூரிட்டியை அழைத்து அங்கு என்ன எதுவும் பிரச்சனையா என்று கேட்டார்.அதற்கு அவர் ”அவர்கள் தண்ணீர் கேட்டார்கள்” என்று கூறினார்.

அதற்கு ராஜா இப்படி இடையூறு செய்தால் நான் எப்படி நிகழ்ச்சி நடத்துவது என்று கடிந்து கொண்டார்.பின்பு செக்யூரிட்டி ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பின்பு அவர் ரசிகர்களை பார்த்து “ நீங்களெல்லாம் இங்கே பல மணி நேரம் என்னுடைய இசையை ரசிப்பதற்காக உட்காந்திருக்கிறீர்கள், நானும் இங்கு ஐந்து மணி நேரம் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.இதை போன்று சிறு சிறு இடைஞ்ச்ல்கள் வந்துகொண்டிருந்தால் நான் எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்றும் மேலும் அவர் ”1000 ருபாய்க்கு டிக்கெட் வாங்கியவர்கள் 10000 ரூபாய் இருக்கைகளில் சென்று உட்கார்ந்தால் அங்கு உட்காரவேண்டியவர்கள் எங்கு உட்காருவார்கள் என்று கடிந்து கொண்டார். இதனால் விழாவில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தற்போது இதுகுறித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே திரைபட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ என்ற விழா எடுக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த இளையராஜா நடிகை ரோகினியை திட்டும் விதத்தில் பேசினார். அது அரங்கத்தில் இருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரோகிணி இதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.