1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (17:44 IST)

இளையராஜா பாடல்கள் உரிமை விவகாரம் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீபத்தில் இளையராஜா தன் பாடல்களை தனது அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்று ஒரு அறிக்கை விடுத்தார். இது குறித்து பலரும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.  இதையடுத்தது அகி (agi) என்ற நிறுவனம் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி தொகை கேட்பதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 
இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்ரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில் இளையராஜா ராயல்டி தொகை கேட்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அகி  (ஏஜிஐ ) நிறுவனம் தொடர்ந்த வழக்கை நிதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
இளையராஜவின் பாடல்களை 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த உரிமை உள்ளதாக அகி மியூசிக் நிறுவனம் வழக்குத் தொடுத்திருந்ததை அடுத்து இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.
 
மேலும் இளையராஜாவின் பாடல்களைப்பயன்படுத்த அவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.