1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (07:45 IST)

இளையராஜாவுக்கு ஒரு கோடி, ஐசரி கணேஷுக்கு 5 கோடி: விஷால் மீது பரபரப்பு புகார்

நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இளையராஜாவுக்கு சமீபத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு பேசப்பட்ட தொகையில் இன்னும் ஒரு கோடி ரூபாயை அவருக்கு விஷால் தரவில்லை என தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்திற்காக தானாக முன்வந்து பல உதவிகளை செய்த ஐசரி கணேஷுக்கும் ரூ.5 கோடி இழப்பு ஏற்படுத்தியவர் விஷால் என்று தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் விஷாலால் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறி பட்டியல் வெளியிட்ட தயாரிப்பாளர் ராஜன், விஷால் அகற்றப்பட வேண்டிய கரும்புள்ளி என்றும் விமர்சனம் செய்தார்.
 
விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கமும் களமிறங்கியுள்ளதால் பாண்டவர் அணியின் வெற்றி சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன