1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (11:06 IST)

150 வயது வரை இருப்பேன், என்னை முதல்வராக்கினால் அந்த வித்தையை சொல்வேன்: சரத்குமார்

எனக்கு இப்போது 69 வயது ஆகிறது என்னால் 150 வயது வரை உயிர் வாழ முடியும் அந்த வித்தை நான் கற்றுக் கொண்டுள்ளேன், அந்த வித்தையை நான் பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் 2026ல் என்னை முதலமைச்சராகுங்கள் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனக்கு தற்போது 69 வயது, ஆனாலும் நான் 25 இளைஞர்களை போல் இருக்கிறேன. 150 ஆண்டுகள் வரை என்னால் உயிருடன் இருக்க முடியும்,  அதை என்னால் சாதித்து காட்டவும் முடியும். 
 
அந்த வித்தையை நான் பிறர் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு என்னை முதலமைச்சராகுங்கள், நான் முதலமைச்சர் ஆவேன் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது 
 
நான் மற்ற அரசியல் தலைவருக்குள் ஆவேசமாகவும் கோபமாகவும் பேசியதையே திரும்பத் திரும்பவும் பேச மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran