புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (15:45 IST)

மீண்டும் வில்லனாக நடிக்கும் கெளதம் மேனன்

தமிழ் சினிமாவில், ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் கெளதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கெளதம் மேனன். மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன அவர், காக்க காக்க, வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது விக்ரம் நடிப்பில், துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சமீபகாலமாக வில்லனாக சில படங்களில் நடித்து வந்த கவுதம் மேனன், சிம்புவின் பத்து தல படத்திலும்  வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் கெளதம் மேனன்  மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.