சூப்பர் டீலக்ஸை தமிழ் ராக்கர்ஸில் பார்ப்பேன்! சொன்னவருக்கு தியேட்டர் உரிமையாளரின் நெருடவைக்கும் பதில்!

Last Updated: சனி, 23 மார்ச் 2019 (15:28 IST)
சூப்பர் டீலக்ஸ் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பார்ப்பேன் என்று டுவிட் செய்த நபருக்கு, நெல்லை தியேட்டர் கொடுத்த பதில் டுவீட் செம்ம வைரலாகி வருகிறது.
 

 
தமிழ் சினிமாவில் புதுமையான திரைமொழியோடு தனித்துவமான கதாபாத்திரங்களை கொண்ட ஒரு படத்தை  பற்றிய பதிவுகள் இப்போதுவரை சமூக வலைதளங்களில் எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது என்றால் அது `ஆரண்ய காண்டம்' படமாகத்தான் இருக்கும். 
 
அப்படி  தன் முதல் படம் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சுண்டி இழுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படமாக  தற்போது விஜய் சேதுபதியை வைத்து சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என ஆச்சர்யப்பட வைக்கும் மெகா நட்சத்திரங்கள் ஒன்றுகூடிய இப்படம் வெளியாகத் தயாராகவுள்ளது. 
 
சமீபத்தில் வந்த இப்படத்தின் டீசர்களிலேயே இப்படத்தின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்துவிட்டது. பலரும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என இதனை பாராட்டி விட்டார்கள். ரசிகர்கள் பலர் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இப்படத்தில் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். 
 
இந்நிலையில் நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு கூடிய விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் இருக்கும் என்று டுவீட் செய்திருந்தது. 
 

 
இந்த டுவீட்டுக்கு ஒருவர் ‘ தமிழ் ராக்கர்ஸ்-ல் படத்தை பார்த்துவிட்டு, அந்த டிக்கெட் பணத்தை பிச்சைக்காரனுக்கு பிச்சை போடலாம் என்று டுவீட் செய்திருந்தார். 
 
இதற்கு ரீடுவீட் செய்த முத்துராம் தியேட்டர், ’முதலில் அதை செய்யுங்கள். எங்களால் ஒரு ஏழை நன்றாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. மேலும் அப்படி செய்து ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்புங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நெட்டீசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :