சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் திரைவிமர்சனம் ! பிரபல பாலிவுட் இயக்குனர் பதிவு!

Last Updated: வெள்ளி, 15 மார்ச் 2019 (16:04 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார். 
விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த சீதக்காதி படத்திற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருவது சூப்பர் டீலக்ஸ். இப்படத்தை தியாகராஜா குமாரராஜா இயக்க விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார்.
 
விஜய் சேதுபதியோடு சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின்  ஃபஹத் ஃபாசில்,ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்டோர்  நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  தற்போது  பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதாவது , சூப்பர் டீலக்ஸ் படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது எனக்கு வருத்தமாக உள்ளது. தியாகராஜ குமாரராஜா மிகவும் தெளிவான,திறமையான, பயமற்ற ஒரு இயக்குனர். இவர்  நிறைய திறமைகளை பெற்றிருக்கிறார்.இதை தவிர நான் இப்போதைக்கு படத்தை பற்றி வேறு ஒன்றும் சொல்ல முடியாது, நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின்  முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யாப் விஜய்சேதுபதியின் படத்தை  பாராட்டி இருப்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இவர் ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :