ஒரு நாள்.. ஒரு ஆள்..: டப் பண்ண இவ்வளவு கஷ்டப்பட்டாரா விஜய் சேதுபதி?

Last Updated: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (15:18 IST)
ஆரண்ய காண்டம் படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். 
 
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலரில் ஒரு நாள்... ஒரு ஆள்... என்று நீண்ட வசனம் ஒன்றை விஜய் சேதுபதி பேசியிருப்பார். இந்த வசனத்தை அவர் எப்படி பேசினார் என்பதன் வீடியோ வெளியாகியுள்ளது. 
 
ஆம், விஜய் சேதுபதியின் டப்பிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :