சூப்பர் டீலக்ஸ் சில்பாவ தெரியும்; லீலாவ தெரியுமா??

Last Updated: செவ்வாய், 19 மார்ச் 2019 (21:00 IST)
நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல ஹீரோயினாக வளம் வந்தவர். பின்னர் சினிமாவை விட்டு சற்று காலம் ஒதுங்கியிருந்து, சின்னத்திரையில் நடித்தார். 
 
அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி கொடுத்த ஹிட் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை தேடி கொடுத்தது.  
 
தற்போது ரம்யா கிருஷ்ணன், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஏன் ஆபாச நடிகையாக நடித்தேன் என அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளேன். என் கதாபாத்திரத்தின் பெயர் லீலா. அந்த படத்தில் ஒரு காட்சிக்காக 37 டேக் வாங்கினேன். 
 
நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வேண்டாம். ஏதாவது புதிதாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்த நேரத்தில் சூப்பர் டீலக்ஸ் பட வாய்ப்பு வந்தது.
 
லீலா போன்ற கதாபாத்திரம் அடிக்கடி கிடைக்காது. அதனால்தான் தியாகராஜன் குமாரராஜா கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். ட்ரெய்லரை வைத்து கதையை நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :