வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 மார்ச் 2019 (20:59 IST)

37 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்: அந்த காட்சியிலா..?

நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல ஹீரோயினாக வளம் வந்தவர். பின்னர் சினிமாவை விட்டு சற்ரு காலம் ஒதுங்கியிருந்து, சின்னத்திரையில் நடித்தார். 
அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி கொடுத்த ஹிட் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை தேடி கொடுத்தது. 
 
தற்போது ரம்யா கிருஷ்ணன், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.  
 
இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக நடித்துள்ளாராம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சியை இரண்டுநாட்களாக படமாக்கினார்களாம். 
 
அதிலும் ரம்யா கிருஷ்ணனை வைத்த 37 டேக் எடுத்தார்களாம். நடிகை ரம்யா கிருஷ்ணன் பொறுமையாக இருந்து நடித்து கொடுத்தார் என செய்திகள் வெளியாகியுள்ளது.