வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (23:08 IST)

இனிமேல் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்- துல்கர் சல்மான்

seetha rama
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்துள்ள இரண்டாவது படம் 'சீதா ராமம்'. இப்படமும் காதல் பின்னணியில் அமைந்துள்ளது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முரனல் தாகூர்   நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, கவுதம் மேனன், முரளி சர்மா, ராஷ்மிகா மந்தனா  உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், தன் முதல் படத்தில் மட்டுமே ஆக்சன் படத்தில் நடித்த துல்கர் சல்மான், அதன் பின்  நடித்த அத்தனை படங்கலும் காதல் கதையில் அமைந்தன. இந்த நிலையில் 'சீதா ராமம்' பட வரும் ஆகஸ்ட் 5 ல் ரிலீஸாக உள்ளது. இதன் பிரமோஷனில் பங்கேற்றுப் பேசிய துல்கர் சல்மான், இனிமேல் காதல் கதைகளில் தான்  நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.