செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (17:26 IST)

மலையாள ஹீரோ படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் திலீப் மீது நடிகை கடத்தல் வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், தீவிரமாக அவர் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பப்பன் என்ற படத்தில் நடிக்க திலீப் ஒப்பந்தமாகியுள்ள நிலையில்,  இவர் மீதான வழக்குகள் சம்பந்தமாக படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனது.

இதுகுறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே சூப்பர் பவர் சக்தியை மையப்படுத்தி மின்னல் முரளி என்ர படம் ஹிட் அடித்துள்ளதால், இப்படத்தை பான் இந்தியா படமாகக் கொண்டு வர படக்குழு முயறிசித்து வருகிறது.