செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 ஜூலை 2022 (14:07 IST)

விஜய்யின் ''வாரிசு ''பட ரிலீஸுக்கு முன் போட்ட முதலீட்டை அள்ளிய தயாரிப்பாளர் !

Varisu Poster
விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்திற்குப் போட்ட முதலீட்டை அள்ளியதாக தகவல் வெளியாகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன.

இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வாரிசு படத்திற்கான வியாபாரம் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தைக் கைப்பற்றை கடும் போட்டில் இருக்கும் சூழலில். விஜய்யின் 66 வது படமான வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம்  தமிழ்,க் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்ரூ.100 கோடிக்கு கைப்பற்றியுள்ளதகவும், சாட்டிலைட் உரிமையை ரூ.65 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்தி மொழிக்கு தனியாக ரூ.40 க்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டியில் பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் உள்ள இப்படத்திற்கு தயாரிப்பாளர் தில் ராஜூ போட்ட முதலீட்டுத்தொகையை  படம்  வெளியாவதற்கு முன்பே எடுத்துள்ளார் என பேசப்படுகிறது.