வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:04 IST)

பலரது கன்னங்கள் பழுக்க அறைந்திருக்கிறேன் - பிரபல நடிகை ’ஓபன் டாக் ‘

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஆண்களின் கன்னங்களை பழுக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான ’ஹேராம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. இவர் ’மர்தானி 2’ என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராணி முகர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது ஒரு செய்தியாளர், நீங்கள் சினிமாவுக்கு வந்த புதிதில் யாராவது உங்களிடம் தவறாக நடந்தார்களா... அவர்களிடம் எப்படி உங்களை தற்காத்து கொண்டீர்கள் என கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு ராணி முகர்ஜி, நான் துர்கா தேவியைப் பார்த்து வளர்ந்தவள், அப்படி  தவறாக நடக்க முயன்றவர்களின் கன்னங்களை பழுக்க அறைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.