செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (21:06 IST)

பிக்பாஸ் - 3 புகழ் நடிகை மதுமிதா வீட்டில் விருந்து ..டுவீட்டில் மனம்விட்டு பேசிய சேரன்

தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  'பிக் பாஸ் சீசன் - 3' களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று  குறைந்துள்ளது. 
இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
 
இந்நிலையில், சமீபத்தில், பிரபல இயக்குநர்  சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபலங்களை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்.
 
அதில், 'கவின், லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
 
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்னைக்கு வரவேண்டாம்.’ என தெரிவித்தார். அது டுவிட்டரில் பெரும் பேசு பொருளானது. இதையடுத்து நடிகர் விவேக்கும் சேரனுக்கு ஒரு டுவீட்டில் அறிவுரை கூறினார்.
 
இந்நிலையில், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதாவின் வீட்டுக்குச் சென்ற சேரன் , அங்கு விருந்து உண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ’அறிவுரை பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்.
 
உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்..’என்று தெரிவித்துள்ளார்.
 
அதற்கு நடிகை மதுவிதா, உங்களின் வருகையால், எங்களின் இல்லம் மகிழ்ச்சியில் மூழ்கியது. thanks for coming sir @directorcheran happy happy i am very happy என்று தெரிவித்துள்ளார்.