திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (17:13 IST)

’கமலுக்கு ஒடிசா பல்கலையில் விருது’... ம.நீ.ம தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி

நாளை ஒடிஷா பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விருது வழங்கவுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கு ஒடிஷா பல்கலை சார்பில், நாளை, கவுரவ பட்டம் அளிக்கப்படவுள்ளது.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த விருதை  வழங்கவுள்ளார்.
 
மேலும், பரமக்குடி திறன் மேம்பாட்டுத் மையத்திற்கு கிராம் தரங் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்கடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 
 
இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.