செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2019 (15:14 IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாரா ?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக  இருப்பவர்கள் நடிகர் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களாகக் கருதப்படுகிறார்கள்.
தற்போது கமல்ஹாசன் அரசியலிலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் சினிமாவில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ  வெளியீட்டுவிழா வரும் டிசம்பர் 7 ஆம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அடிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே, நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.
 
அதம்பிறகு, ரஜினியின் அடுத்த  படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.