ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (09:21 IST)

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

ananthi flims Natarajan

தமிழ் சினிமாவில் 80களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் மாரடைப்பால் காலமானார்.

 

தமிழ் சினிமாவில் 80களில் வெகுஜன படங்கள் பலவற்றை தயாரித்தவர்களில் ஒருவர் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன். இவரது தயாரிப்பில் முள்ளும் மலரும், உத்தம புருஷன், ராஜா கைய வெச்சா, பங்காளி, சின்ன கவுண்டர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றன.

 

உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன், படத்தயாரிப்பிலிருந்து விலகியதுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார். அவரது உடல் மயிலாப்பூர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K