திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (20:06 IST)

ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா...ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை

jeyiler
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம்  பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் முதல் சிங்கில் காவாலா, 2 வது சிங்கில் குஹூம், 3 வது சிங்கில் ஜுஜுபி நேற்று முன தினம்  ரிலீஸானது. இந்த நிலையில்  நேற்று இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அதில்,  இப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ரன்னிங் டைம் எனவும்,  யு/ஏ சான்றிதல் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இன்று, இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  நடிகர் ரஜினிகாந்த், அனிருத், நெல்சன், உள்ளிட்ட பிரபலங்கள் அரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையே, ஜெயிலர் படத்தின் காவாலா, ஜெயிலர் தீம், ரத்தமாரே,  முத்துவேல் பாண்டியன் தீம் மியூசிக், குஹூம், ஜெயிலர் டிரில், ஜுஜுபி, அலப்பற ஆகிய பாடல்கள் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.