1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (20:49 IST)

ஜெயிலர் படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்

Jailer
ஜெயிலர் படத்தைப் பார்த்த கமல் ரஜினி மற்றும் நெல்சனை பாராட்டியதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  ஆகஸ்ட் 10 ஆம்  தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு   உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இப்பட,ம் முதல் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் விரைவில் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் பட வசூல் சாதனையை முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிக்கு செல்போனில் அழைத்து பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதற்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்,  கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இப்படத்தைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.