ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (20:45 IST)

''அமீர் இன்னும் வீறு கொண்டு எழுவார்''- பிரபல இயக்குனர் கருத்து

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்தார்.  இந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தின் இயக்குனர் அமீர் தரப்புக்கும், ஞானவேல் ராஜா தரப்புக்கும் இடையில் பிரச்சனை நீடிக்கிறது.

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், சமீபத்தில், அமீர் பற்றி ஞானவேல் ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் சசிக்குமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, பாரதிராஜா உள்ளிட்டோர்  அமீருக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில், இயக்குனர் நந்தா பெரியசாமி, அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

 
''பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்...
 
கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்...

தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்...''என்று தெரிவித்துள்ளார்.