1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J Durai
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (12:40 IST)

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் சசிக்குமார்!

நடிகர் சத்தியராஜ் நடிப்பில் ஜனவரி மாதம் குற்றப்பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க உள்ளேன் - மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக  நடிகர் சசிக்குமார் பேச்சு.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவின் இறுதி நாள் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனரும், நடிகருமான சசிக்குமார், க/பெ.ரணசிங்கம் பட இயக்குனர் விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலை இலக்கிய விழாவில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
 
தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் சசிக்குமார். கல்லூரியில் மட்டுமே அதிகமான நட்புகள் நண்பர்கள் கிடைப்பார்கள் எனவும், அயோத்தி படம் என்னையே மாற்றியது, நிறைய நண்பர்களை வைத்து தான் படம் எடுத்து வந்தேன் இந்த படம் மனிதத்தை காட்டியதை விட எனக்கும் கற்றுத் தந்தது என பேசினார்.
 
மேலும் தெரிந்தவர்களுக்கு உதவி செய்வதை போல தெரியாதவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் எனவும்., கலை இலக்கிய விழாக்களை பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும், நம் மண் சார்ந்த கலையையும், நம் கலாச்சாரத்தையும் யாருக்காவும் விட்டுக் கொடுக்க கூடாது என பேசினார்.
 
தொடர்ந்து இயக்குநராக இருந்து நடிகரான சசிக்குமார், மீண்டும் எப்போது இயக்குநர் ஆவார் என மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு விரைவில் வரும் ஜனவரியில் நெட் ப்ளிக்ஸ் மூலம் வெப் சீரிஸ் இயக்க உள்ளேன் எனவும், குற்றப்பரம்பரை நாவலை தழுவி எடுக்க உள்ள வெப் சீரிஸ்-ல் சத்தியராஜ் சார் நடிக்கிறார் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.