புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 13 மே 2020 (20:04 IST)

என்னால் பழையபடி நடிக்க முடியாது - பிரபல நடிகை

கடந்த 90 களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி முதன் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும். அதனால் நான் அவருடன் கடுமையாக சண்டை போடுவேன். பிறகு சிறிது நேரம் கழித்து அவர் ஒரு காபி போட்டு எடுத்துக் கொண்டு தருவார். அதன்பின் சண்டை எல்லாம் புஷ்வானம்போல் மாயமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எங்களுக்கு கடவுள் அழகான குழந்தைகளைக் கொடுத்துள்ளார்.  அதனால் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

நான் தமிழில் மீண்டு நடிப்பேனா என்பது குறித்து கேள்வி எழுப்புகின்ற்னர். எனக்கு ஏற்ற நல்ல கதைகளையுடைய கதாபாத்திரம் அமைந்தால், நான் நடிப்பேன்.  என்னால் பழைய படி, பாடி, ஆடி என்னால் நடிக்க முடியாது. ஏனேன்றால் நான் ஒரு தாய் என்று தெரிவித்துள்ளார்.