வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 9 மே 2020 (19:04 IST)

3 குழந்தைக்கு அம்மா... 43 வயதில் அழகு சும்மா அள்ளுது - நடிகை ரம்பா பக்கம் திருப்பிய 90ஸ் கிட்ஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இவர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் குடம் குழந்தை என செட்டில் ஆகி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர், நடுவில் கணவருடன் ஏற்பட்ட சில பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்த ரம்பா அதையடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்தார். பின்னர் இவர்களுக்கு மூன்றாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

ஒரு காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த ரம்பா தற்போது குழந்தை, கணவர் என முழு குடும்ப பெண்ணாக மாறிவிட்டார். சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது சிம்பிளாக எடுத்த செல்பி போட்டோக்களை வெளியிட்டு 90ஸ் கிட்ஸ் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் 3 குழந்தைக்கு அம்மாவாகி 43 வயதானாலும் இன்னும் இளமையாகவே வசீகரிக்கிறீர் என கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.