1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (11:50 IST)

மீண்டும் டுவிட்டரில் இணைந்தார் பிக்பாஸ் சனம்ஷெட்டி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சனம்ஷெட்டி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார் என்பது தெரிந்ததே. அவர் எதிர்பார்த்ததை விட விரைவில் எலிமினேட் செய்யப்பட்டாலும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்தது என்பதும் அதன் பின்னர் தற்போது திரைப்பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சனம்ஷெட்டி கடந்த சில வாரங்களாக டுவிட்டரில் இருந்து விலகியிருந்தார்
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் டுவிட்டரில் தான் திரும்பி வந்துள்ளதாகவும் இனிமேல் ரசிகர்களுடன் டுவிட்டர் மூலம் மிகவும் நெருக்கமாக இருக்க போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்
 
மேலும் அவர் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.