1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 மார்ச் 2021 (13:08 IST)

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முக ஸ்டாலின்: வைரல் புகைப்படம்!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முக ஸ்டாலின்: வைரல் புகைப்படம்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது 
 
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து முதல்கட்ட தடுப்பூசியும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட பல பிரபலங்களும் திரையுலக நட்சத்திரங்களும் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு நர்ஸ் ஒருவர் தடுப்பூசி போடும் புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது