திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (05:41 IST)

யாரெல்லாம் என்னோடு ’வலிமை’ படம் பாக்குறீங்க: சென்னை ரசிகர்களுக்கு ஹூமா குரேஷி டுவிட்

யாரெல்லாம் என்னோடு ’வலிமை’ படம் பாக்குறீங்க: சென்னை ரசிகர்களுக்கு ஹூமா குரேஷி டுவிட்
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு ரிலீசாகி முதல் காட்சி திரையிடப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் அஜித் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகின்றனர் 
 
போனிகபூர், நாயகி ஹூமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா ஆகியோர் ரசிகர்களுடன் படம் பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
இந்த நிலையில் நடிகை ஹூமா குரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னையில் என்னுடன் யாரெல்லாம் படம் பார்க்கிறீர்கள் என பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு ஏகப்பட்ட  லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்களுடன் படம் பாக்கும் முதல் அனுபவத்தை போனி கபூர், கார்த்திகேயா, ஹூமா குரேஷி ஆகியோர் இன்று பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,