வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (05:16 IST)

சென்னை ரோஹினி தியேட்டருக்கு வந்த போனிகபூர்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

boney
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று காலை 4 மணி காட்சியை பார்ப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சென்னை ரோஹினி திரையரங்கிற்கு வந்தார் 
 
அவரை சுற்றி ரசிகர்கள் வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பாக அவரை அவருடைய பாதுகாவலர்கள் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். ரசிகர்களின் உற்சாக வரவேற்பு போனி கபூரை நெகிழ செய்ததாக கூறப்படுகிறது 
 
இன்று அவர் ’வலிமை’ படத்தை முழுவதுமாக ரசிகர்களின் கரகோஷத்துடன் பார்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.