செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (18:04 IST)

’ஹிருதயம்’ ரீமேக் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

’ஹிருதயம்’ ரீமேக் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!
சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’ஹிருதயம்’ என்ற படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான ’ஹிருதயம்’ படத்தின் தமிழ் தெலுங்கு இந்தி உரிமையை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் கரண்ஜோஹர் பெற்றுள்ளார். இவர் தனது பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்த உரிமையை பெற்றுள்ளதாகவும் விரைவில் தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஹிருதயம் படத்தின் தமிழ் ரீமேக்கில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது