வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (11:18 IST)

விஜய் சேதுபதியின் ஹிட் படத்தை குஜராத்தியில் ரீமேக் செய்யும் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலமாக ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்து தயாரிக்கிறார்.

2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆண்டவன் கட்டளை. வெகுவாக பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்ற இந்த திரைப்படம் இப்போது குஜராத்தி மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்த ரீமேக் படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலமாக தயாரிக்கிறார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மல்ஹர் தக்கர், ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். நேற்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டார்.